×

இளம் வாக்காளர்களே ஓட்டு போடுங்க… 118 வயது ‘மிட்டாய் தாத்தா’ பிரசாரம்

தஞ்சாவூர் கீழவாசல் ஆடக்காரத்தெருவில் வசித்து வருபவர் முகமது அபுசலி (118). ‘மிட்டாய் தாத்தா’ என்று அழைக்கப்படும் இவர், வீட்டையொட்டி மிட்டாய் கடை வைத்து நடத்தி வருகிறார். அன்றாட பணிகளை யாருடைய உதவியுமின்றி தானே செய்து வருகிறார். இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார். இந்நிலையில் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள 18வது மக்களவை தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் இருந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்த மிட்டாய் தாத்தா முகமது அபுசலி, ‘மதிப்புமிக்க வாக்குகளை பணத்துக்காக விற்காமல் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க தகுதிபெற்ற அனைவரும் குறிப்பாக 18 வயது நிறைவடைந்து முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தில் நமது உரிமையை நிலைநாட்டும்’ என்று கூறி பொதுமக்களிடம் இனிப்புகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

The post இளம் வாக்காளர்களே ஓட்டு போடுங்க… 118 வயது ‘மிட்டாய் தாத்தா’ பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Candy ,Mohammad Abusali ,Keezhavasal Aadkaratheru, Thanjavur ,Candy Datta ,
× RELATED 118 வயது மிட்டாய் தாத்தா தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்